🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹

🌷நாளிதழ் செய்திகள்🌷

வியாழன் – ஆகஸ்டு 3

———————————————————–

  • டிடிவி தினகரனின் கெடு நெருங்குவதால் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் தொடர்ந்து ஆலோசனை

 

  • புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் தீபாவளி முதல் ரிலீஸ்

 

  • மெரீனா கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றம்…போலீசாரின் பாதுகாப்போடு நள்ளிரவில் மணி மண்டபத்திற்கு மாற்றம்.

 

  • 5,8ஆம் வகுப்புகளில் இனி ஆல் பாஸ் கிடையாது – கட்டாய தேர்ச்சி முறை ரத்து! – நடுவண் அமைச்சரவை ஒப்புதல்

 

  • ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை.. அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல்

 

  • குஜராத் காங். எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட், அமைச்சர் வீட்டில் ஐடி ரெய்டு.. பெங்களூரில் கூவத்தூர் பாணி பரபரப்பு

 

  • ஹைட்ரோ கார்பனை எதிர்த்து 113 நாளாக போராட்டம்- கண்டு கொள்ளாத அரசுகள்: அதிருப்தியில் நெடுவாசல் மக்கள்

 

  • ஜெயலலிதா சொத்துக்குவித்த வழக்கு.. தண்டனை பெற்ற சசிகலா சீராய்வு மனு தாக்கல்… விசாரணை அமர்விலிருந்து தானாக விலகிய நீதிபதி!

 

  • காவிரி நதிநீர் தீர்ப்புகளை கர்நாடகா மதிப்பதில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் அதிரடி வாதம்

 

  • தினகரன் பற்றிப் பேசினால் பதவி போய்ரும்.. ஜெயக்குமாருக்கு வெற்றிவேல் கடும் எச்சரிக்கை

 

  • பிளீச்சிங் பவுடர் உட்கொண்டு ஆயுள்தண்டனைக் கைதி தற்கொலை.. புழல் சிறையில் பரபரப்பு

 

  • தமிழகத்தில் எய்ம்ஸ்: டிச. 31க்குள் இடம் தேர்வு செய்ய மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!

 

  • மதுரைக் காமராஜர் பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு 15 கோடி.. வேந்தர் பதவி விலக ராமதாஸ் கோரிக்கை

 

  • ஐபிஎஸ் அதிகாரி ரூபா மீது நிச்சயம் வழக்கு தொடரப்படும்… டிடிவி தினகரன் திட்டவட்டம்!

 

  • திருச்சியில் காணாமல் போன 10ம் வகுப்பு மாணவிகள் 2பேர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுப்பு: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா என விசாரணை.

 

  • கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 10 கோடி ரூபாய் பறிமுதல்!

 

  • அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் செல்வேன்: #டிடிவி தினகரன் உறுதி..!

 

  • வறட்சியால் தற்கொலை செய்துக்கொண்ட 125விவசாயிகளின் குடும்பத்திற்கு தனுஷ் நிதியுதவி

 

  • “எனக்கு பிடிக்காத சில வார்த்தைகளில் ஒன்று வேலை நிறுத்தம்” – ரஜினிகாந்த்

 

  • பவானி கூடுதுரையில் ஆடிப்பெருக்கு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் காவிரி ஆற்றில் புனித நீராடல்

 

  • வடகொரியாவில் உள்ள அமெரிக்கர்கள் இந்தமாத இறுதிக்குள் வெளியேற வேண்டும்: வடகொரியா

 

  • தமிழகத்தில் அடுத்த ஆண்டு இன்ஜினியரிங் சேர்க்கைக்கு நீட் தேர்வு கிடையாது: உயர்கல்வி அமைச்சர் பேட்டி

 

  • முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி பயன்படுத்தும் செல்போன் விலை ரூ.315 கோடி

 

  • மதுரை – வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி இடையே இரட்டை மின்சார ரயில் பாதை: மத்திய அமைச்சரவை

 

  • ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் பலி

 

  • இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர்

 

  • நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க சட்ட விதியில் இடமில்லை: எச். ராஜா பேட்டி

 

  • விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ராமதாஸ் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

 

  • ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவரான சரத் யாதவ் புதிய கட்சி துவங்குவதாக தகவல்

 

  • என்னை கட்சி அலுவலகத்திற்கு வரவிடாமல் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை: சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் பேட்டி

 

  • இலங்கையுடன் இன்று 2-வது டெஸ்ட்: தொடக்க வீரராக களமிறங்குகிறார் ராகுல்

 

  • இடி, மின்னலின் போது கணினி, தொலைபேசிகளைப் பயன்படுத்த வேண்டாம்: மின் வாரிய அதிகாரி அறிவுரை

 

  • துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெங்கய்ய நாயுடுவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு!

 

  • ஆதார் கட்டாயம் என்பது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

 

  • பெட்ரோலிய மண்டலத்துக்கு அனுமதித்த துரோகத்தை ஒப்புக்கொண்ட திமுகவுக்கு நன்றி: அன்புமணி ராமதாஸ்

 

  • ஃபெப்சி வேலைநிறுத்தம்: ரஜினி – செல்வமணி சந்திப்பு

 

  • அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்களை முடக்கிய புதுக்கோட்டை நிலப்பதிவாளர் பணியிட மாற்றம்

 

  • மத்திய அரசின் மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்படமாட்டோம்’ கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிக்கை

 

  • டெல்லியில் தொடர் போராட்டம் விவசாயிகளுக்கு கனிமொழி எம்.பி. நேரில் ஆதரவு

 

  • பீகார் புதிய அமைச்சரவை: 76% பேர் கிரிமினல் வழக்கை எதிர்க்கொள்கிறார்கள், 72% பேர் கோடீஸ்வரர்கள்…

 

  • கர்நாடகாவில் வருமான வரித்துறை ரெய்டு காங்கிரஸ் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

 

  • ஏசி வகுப்பில் பயணிப்பவர்களுக்கு இனி போர்வை கிடையாது: ரயில்வே முடிவு

 

  • அமைச்சர் விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில் குவாரி பரிவர்த்தனைகள் வருமானவரித்துறை ஆவணங்கள் மூலம் தகவல்

 

  • கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்தபோது வருமான வரித்துறை வேடிக்கை பார்த்தது ஏன்? காங்கிரசுக்கு மு.க.ஸ்டாலின் வக்காலத்து

 

  • அ.தி.மு.க.வை அதிகம் எதிர்ப்பது பா.ம.க. தான் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை

 

www.tamilnewsanchors.com

 

Facebook : Tamil News Anchors

 

you tube : Tamil News Anchors Association