கல்லெறிதல் .. நடந்தது என்ன…….விளக்கம்

கல்லெறிதல் தவறு என்பவர்கள், அவர்களுடைய மகளோ, தங்கையோ ஊடகத்தில் ரிப்போர்ட்டராகவோ, செய்தி வாசிப்பாளராகவோ பணிபுரிந்தால், எஸ்.வி.சேகரின் பதிவை படித்து பார்த்து ரசிப்பார்களா?*

*இல்லை, நமக்கேன் வம்பு என மூஞ்சில் துப்பிய எச்சிலை துடைத்துவிட்டு வேறு வேலையை பார்க்க போய்விடுவார்களா?*

*எஸ்விசேகர் வீட்டில் கல்லெறிந்து எச்சரிக்கை போராட்டம் நடத்திய ஊடகவியலாளர்களை இதுவரை அரசோ, அமைச்சர்களோ, அரசியல்வாதிகளோ, பொதுமக்களோ…தவறு என்று எங்கும் சொல்லவில்லை*

*ஏனென்றால், பெரியார் மண்ணில், பெண்ணியத்தை காக்க, வெகுண்டெழுந்த கூட்டம்தான்.. அந்த கல்லெறி வீரர், வீராங்கணைகள் என நினைக்கிறார்கள்*

ஏன் இப்படி நடந்தது?

*அரசின் அதிகாரத்தால் அவர்கள் வாயை அடக்க முடியவில்லை*

*காவல்துறை கடமையை செய்து அவர்களை கைது செய்ய முடியவில்லை*

*அரசியல்வாதிகளின் கண்டன அறிக்கைகளால் அவர்களை அமைதிப்படுத்த முடியவில்லை*

*ஆனால், செய்திவாசிப்பாளர்களும், செய்தியாளர்களும் சேர்ந்து அவர்கள் நாவை இன்று அடக்கியிருக்கிறோம்*
*பெருமிதம் கொள்ளுங்கள்!*

அவர்களுக்கு ஏன் கோபம்?

*கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் ஆணவ, அராஜகப் பேச்சுக்களை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தது பத்திரிகைகளும், ஊடகங்களும்தான்*

*இந்த நிலையில்தான், பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்தது அவர்கள் கோபம்*

*அதுவும், பத்திரிகையாளர்கள் மீது சாதாரண தாக்குதல் அல்ல…உச்சகட்டத் ஆபாச, அருவருக்கத்தக்கத் தாக்குதல்*

*பத்திரிகையாளர்களை சுட்டுக்கொன்றபோது கூட இந்த கோபம் வெளிப்படவில்லை*

யாரை தாக்கியிருக்கிறார் எஸ்விசேகர்?

*அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களையும் அசிங்கப்படுத்தியிருக்கிறார்*

*அனைத்து ஊடகங்களிலும் உயர்பொறுப்பில் இருப்பவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறார்*

*பெண் செய்திவாசிப்பாளர்களையும், செய்தியாளர்களையும் அசிங்கப்படுத்தியிருக்கிறார்*

*ஒட்டுமொத்த ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் எந்த முறையில், எப்படி வேலைக்கு சேர்கிறார்கள், என்று வாய்கூசாமல் ஒரு அசிங்கமான பதிவை போட்டு, அதை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்*

இதையும் பொறுத்துக்கொள்ள வேண்டுமா?

*இத்தனை தாக்குதல்களையும் பொறுத்துக்கொண்டு போவதும், உயிரற்ற ஜடமாக இருப்பதும் ஒன்றுதானே*

கல்லெறியாமல் என்ன செய்ய?

கண்ணை மூடி தியானம் செய்யவேண்டுமா?

*வழக்கம் போல, எங்கேயாவது தெருவோரம் நின்று, எஸ்விசேகருக்கு எதிராக நான்கு கண்டன பதாகைகளை கையில் ஏந்தியபடி, ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம், பத்திரிகையாளர்களின் ஆர்ப்பாட்டம் என கூவச் சொல்கிறீர்களா?*

*இல்லை, அவரது படத்தை எரித்து, செருப்பால் அடித்து, நடுரோட்டில் நின்று முழக்கமிடுவது மட்டும் கண்ணியமான போராட்டம் என்றாகி விடுமா?*

*இல்லை..அரசின் கவனத்துக்கொண்டு சென்று, காவல்துறையில் புகார் அளித்து, சட்டப்படி தண்டனைதான் வாங்கி கொடுத்துவிட முடியுமா?*

*இந்திய விடுதலைக்கு காந்திக்கு சமமான போராட்டம் நடத்தியவர் நேதாஜி அவர்கள்*

*நேதாஜி வழி நடக்கும் பிள்ளைகளாக நாங்கள் 30பேர் இருந்துவிட்டு போகிறோம்..முதல் கல்லை நாங்கள் எறிந்திருக்கிறோம்*

*இதுவும் ஒரு நியாயமான போராட்ட வடிவமே*

*கல்லெறிவது எஸ்விசேகரை காயப்படுத்தவோ, காலி செய்யவோ அல்ல என்பதை உணருங்கள்*

*பூட்டிய பங்களாவின் மீது கல்லெறிதல்!*

*ஒரு கவன ஈர்ப்பு போரட்டம்தான்!*

*ஆபாச பேச்சுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்தான்!*

*மகளிர் மானம் காக்க நடத்திய மறியல்தான்!*

*எதேச்சதிகாரத்துக்கு எதிரான எச்சரிக்கை போரர்ட்டம்தான்!*

*பாசிஸ்ட்டுகளுக்கு கொடுத்த பதிலடிதான்!*

*கருத்து என்ற பெயரில் காயப்படுத்தியதற்கான கண்டனம்தான்!*

*ஊடகவியலாளர்களின் உரிமைப் போராட்டம்தான்!*

*பத்திரிகையாளர்களின் போர்க்குரல்தான்!*

*ஆனால்,*

*அடித்த அடி ஒவ்வொன்றும் மரண அடி…அவர்களின் ஆணவத்துக்கு*

*பொறுப்பு மிக்க ஊடகவியலாளர்களின் பொறுமையை சோதித்து பார்த்த எஸ்.வி.சேகருக்கு பொருத்தமான அடி…இந்த கல்லடி*

*அடித்தட்டு மக்களை பாதுகாக்கும் அரண்களாக திகழும் பத்திரிகையாளர்களை அவதூறு பேசிய எஸ்.வி.சேகருக்கு பத்திரிகையாளர்களின் பதில் அடி…இந்த கல்லடி*

*எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு கதவை பூட்டிக்கொள்பவர்களுக்கு வாய் பூட்டு போட்ட அடி…இந்த கல்லடி*

*கண்டபடி பேசிவிட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பாசிஸ்டுகளுக்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்தது பதிலடி…இந்த கல்லடி*

அப்படிஎன்றால், எதிர்ப்பவர்கள் யார்? விமர்சிப்பவர்கள் யார்?

*ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையிலும், போராட வராவிட்டாலும், நம்மை காட்டிக்கொடுக்காமல் இருங்கள்*

*உங்களுக்காக போராடியவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், உபத்திரம் செய்யாதீர்கள்*

*ஆபாசத் தாக்குதலுக்கு உரிமைக்குரல் கொடுத்த 30 செய்தியாளர்களுக்கும் நன்றி கூறுங்கள்*

*எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை*
*எதிரியே தீர்மானிக்கின்றான்*

*பிரபுதாஸன்தலைவர்,
தமிழ்ச் செய்திவாசிப்பாளர்கள் சங்கம்*