நாளிதழ் செய்திகள்-ஞாயிறு – ஜூலை 23
🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹
🌷நாளிதழ் செய்திகள்🌷
ஞாயிறு – ஜூலை 23
———————————————————–
– டெல்லியில் 7வது நாளாக தொடரும் போராட்டம்.. பாதி மொட்டை அடித்த தமிழக விவசாயிகள்
– எடப்பாடியை சந்தித்தார் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய ஆறுகுட்டி எம்.எல்.ஏ
– போர் பதற்றம் இந்திய இராணுவம் 10 நாட்களுக்கு மட்டுமே வெடிமருந்துகளை வைத்துள்ளது – சிஏஜி அதிர்ச்சி அறிக்கை
– ஜிஎஸ்டி வரியை மாற்றியமைக்க கோரி சென்னையில் வரும் 25ம் தேதி ஆர்ப்பாட்டம்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு
– கொடுங்கையூர் தீ விபத்து சம்பவம் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
– அமைச்சர்கள் உடன் கருத்து மோதல் நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
– கேரளாவில் 51 வயது பெண்ணிற்கு பாலியல் தொல்லை : காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சண்ட் கைது-14 நாள் நீதிமன்ற காவல்
– கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 2 பேர் பலி
– இன்று தமிழகத்தில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
– டி.என்.பி.எல்.: முதல் போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி
– மும்பையில் தென்னை மரம் தலையில் விழுந்து முன்னாள் தூர்தர்ஷன் செய்திவாசிப்பாளர் காஞ்சன் நாத் உயிரிழப்பு
– இன்று ஆடி அமாவாசை; புனித தலங்களில் திதி கொடுக்க கூட்டம் அலை மோதல்
– ஜூலை-30ல் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல்
– ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் ஜீவசமாதிக்கு அனுமதி கோரி ஏடிஜிபியிடம் மனு
– பெட்ரோக்கெமிக்கல் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டம்: பாமக அறிவிப்பு
– சிறையில் விதிமுறைகளை மீறியது குறித்த குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டால் சசிகலாவுக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது – டி.ஐ.ஜி. ரூபா
– ஆப்கானிஸ்தானில் கிராம மக்கள் 70 பேர் கடத்தல்: 7 பேர் படுகொலை
– பிரணாப் முகர்ஜிக்கு ஃபேர்வல் – நினைவு பரிசு அளித்த பிரதமர் மோடி
– சட்டத்திற்கு உட்பட்டு அயோத்தியாவில் திட்டப்படி ராமர் கோவில் கட்ட பாஜக நடவடிக்கை எடுக்கும் – அமித் ஷா
– தமிழக அரசு மத்திய அரசுக்கு அடியாள் வேலை பார்ப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!
– தமிழகத்தில் இருந்து ஓஎன்ஜிசி-யை விரட்டுவதே எனது அடுத்த வேலை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேட்டி!
– உலக கோப்பையை வெல்லுமா இந்திய மகளிர் படை? இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை
– ரஜினி உருவாக்கும் அரசியல் அமைப்பில் கமல் துணையாக நிற்கலாம்! – தமிழருவி மணியன்
– பல லட்சத்துக்கு விலைபோன சசிகலா சிறை வீடியோ.. வருமானம் ஈட்டும் தொழிலாக மாற்றிய தாதாக்கள்! பரபர தகவல்
– கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய பேராசிரியர் ஜெயராமனின் தந்தை காலமானார்
– இமெயில் முகவரிகள் நீக்கப்படவில்லை, வாட்ஸ் ஆப்பிலும் புகார் தரலாம்… கமலுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி
– ஹிந்தியை அலுவல் மொழியாக்க முயன்றால் பெரும் போராட்டம்.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
– மூடப்பட்ட கடைகளில் ஆளுங்கட்சியினர் ஆசியோடு மதுவிற்பனை.. எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!
– வேலூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 4 பேர் பலி!
– நாகை அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்
– புதுச்சேரி நாராயணசாமிக்கு பெரும் சிக்கல்… 3 எம்.எல்.ஏக்களுடன் நமச்சிவாயம் அணி மாறப் போவதாக பரபரப்பு
– இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்னரே உள்ளாட்சி தேர்தல்… அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
– குட்கா விற்பனை ஊழல்: வருமான வரித்துறை ஆவணங்கள் மறைப்பு! வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
– தமிழகத்தில் மாணவர்களின் கல்வி அறிவை அழித்தது திமுகதான்: பொன்.ராதாகிருஷ்ணன்
– தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தால் பதவிகள் தானாக தேடிவரும்: முதலமைச்சர் பழனிசாமி
– ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைக்கக்கோரி வரும் 25ஆம் தேதி சென்னையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
– டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் ஷண்முகரத்னம் சந்திப்பு
– இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 72 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம்
– ராகுலுடன் நிதிஷ் சந்திப்பு: அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை
– பொறியியல் சேர்க்கை: இன்று முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு
– தமிழ்நாட்டில் ஹிந்தி வராமல் தமிழ் வளராது: இல.கணேசன்
– அமெரிக்கா தலையிட்டால் காஷ்மீர் சிரியா ஆகிவிடும்: மெஹ்பூபா முஃப்தி
– போதை மருந்து விவகாரம் தொடர்பாக தெலுங்கு நடிகர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிக்கு தொலைபேசியில் மர்மநபர்கள் எச்சரிக்கை
– அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு: முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்
– நீட்’ தேர்வுக்கு எதிராக 27–ந் தேதி நடைபெறும் தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
– பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகியதை மக்கள் வரவேற்கிறார்கள் – ஆறுக்குட்டி எம்எல்ஏ பேட்டி
– கமல்ஹாசன் நடிகர் தான் – அரசியலுக்கு வந்தால், அவரின் கருத்துக்கு தகுந்த கருத்தை தெரிவிப்போம்-எடப்பாடி பழனிசாமி
www.tamilnewsanchors.com
Facebook : Tamil News Anchors
you tube : Tamil News Anchors Association